பட்டுக்கோட்டையில் பரிதாபம்! சிறுவன் பைக் ஓட்டியதால் வயதான பெண்மணி மரணம்!

பட்டுக்கோட்டை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பட்டுக்கோட்டை அடுத்த மோகூரை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி பத்மா (60). இவர் சொந்த வேலையாக பேரன் பிருதிவிராஜூடன் (14) பைக்கில் சென்று கொண்டிருந்தார். பிரிதிவிராஜ் பைக்கை ஓட்டி சென்றார்.

கன்னியாக்குறிச்சி ஆற்று பாலம் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக பைக்கிலிருந்து பத்மா தவறி விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பட்டுக்கோட்டை மற்றும் அதிரை பகுதிகளில் சிறுவர்கள் தாருமாறாக பைக் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிப்பது வாடிக்கையாகிவிட்டது.

Advertisement

Close