அதிரையை தொடர்ந்து பட்டுக்கோட்டையிலும் திருடர்கள் கைவரிசை! கடையின் பூட்டை உடைத்து 75,000 ரூபாய் கொள்ளை!

பட்டுக்கோட்டை மார்க்கெட் பகுதியில் தேஜாராம் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு சென்றார்.

இன்று காலை கடையை திறக்க அவர் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்துவிட்டு சென்ற ரூ.75 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுபற்றி அவர் பட்டுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் திருட்டு, வழிப்பறி, செயின்பறிப்பு, கடை, வீடுகளில் பூட்டு உடைத்து கொள்ளை போன்ற தொடர் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதோடு இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-File Image

Close