பட்டுக்கோட்டை அருகே வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை!

பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் சேனாதிபதி தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவருடைய மகன் அகிலன்(30) கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அகிலன் பட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது கரம்பயம் மாரியம்மன்கோவில் ஆர்ச் அருகே அகிலன் வந்தபோது அவருக்கு பின்னால் வந்த மர்ம நபர்கள் அகிலனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அகிலனை சரமாரியாக வெட்டினர். 
இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய அகிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தகவலறிந்த பட்டுக்கோட்டை போலீஸார் சம்பவ இடத்ததிற்கு விரைந்து சென்று தடயங்களை கைப்பற்றியது.
இரவு நேரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Close