ராஜஸ்தானில் மாட்டிறைச்சி கொண்டு சென்ற இளைஞரை துப்பாக்கி முனையில் தாக்கும் காவிகள்! கதறி அழும் இளைஞரின் வீடியோ!

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அவரது பைக்கில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதற்காக சில மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி இஸ்லாமிய பெண்கள் இருவர் கொடூரமாக தாக்கப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

மேலும் கடந்த சில வாராங்களுக்கு முன்பாக பாஜக ஆளும் குஜராத்தில் தலித் இளைஞர்கள் நான்கு பேர் மாட்டுத் தோல் வைத்திருந்ததாக கூறி அவர்கள் மேல் கொடூர தாக்குதல் நடந்தது. அந்த சம்பவமும் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் தலித் மக்கள் பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இப்பொழுது ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மாட்டிறைச்சி கொண்டு சென்றதற்காக துப்பாக்கி முனையில் கொடூரமாக தாக்கப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-நியூஸ்7

Close