அதிரையில் ரயில் போக்குவரத்தை விரைந்து துவங்குவது குறித்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம் (படங்கள் இணைப்பு)

IMG_2989
அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே திட்டம் பணிகள் துவங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகின்றன. இது குறித்து பல கோரிக்கைகள், பல்வேறு புகார் மனுக்கள், பலவிதமான ஆர்ப்பாட்டங்கள் என நமதூர் மக்கள் நடத்தினால் இந்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு எடுப்பது என்பது குறித்து ஒரு ஆலோசனைக்கூட்டம் அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற சுகாதார அதிகாரியும் அதிரையில் கடந்த ஆண்டு டெங்குவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டவருமான விவேகனந்தன் அவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த சமுக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள், முத்துப்பேட்டையை சேர்ந்த சமுக ஆர்வலர்கள் சிலர் கலந்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில்வே பணிகள் எந்த அளவில் உள்ளன? இந்த பணிகளின் மந்தமான செயல்பாட்டிற்க்கு யார் காரணம்? இந்த பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்களாகிய நாம் என்னென்ன முயற்சிகளை செய்ய வேண்டும்? நமது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? எந்த அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சந்திப்பது? மேற்கொண்டு போராட்டங்கள் நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.IMG_2980
IMG_2988
IMG_2991 IMG_2992 IMG_2993 IMG_2994

Close