Adirai pirai
INFORMATION இந்தியா

குறைகிறது பெட்ரோல் டீசல் விலை!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்துள்ளதையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ..1.42 பைசாவும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.01 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.