எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

imageமானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அந்த அறிவிப்பில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டர் ஒன்றிற்கு ரூ.1.93 உயர்த்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01 காசுகளும் குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்த மறுநாளான இன்றே மானிய சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Close