Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை பேருந்து படிக்கட்டில் இருந்து தவறிவிழுந்து கல்லூரி மாணவர் படுகாயம்!

image

-File Image

அதிரையில் தினசரி மதியம் கல்லூரி முடிந்து வீடு செல்லும் கல்லூரி மாணவர்கள் பெரும் திரளாக பேருந்தில் வீடு செல்வது வழக்கம். அந்த நேரத்தில் அவ்வழியாக செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நிரம்பி வழியும். மாணவர்கள் இதனால் தினசரி படிக்கட்டு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மணமேல்குடியை சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரி முடிந்து பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். படிக்கட்டில் பயணம் செய்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலைபகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இது போன்ற ஆபத்தான படிக்கட்டு பயணங்களால் அவ்வப்போது இது போன்று விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது.