அதிரை இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் கைப்பந்து தொடரில் முதலிடம்

கடந்த 14ம் தேதி மதுக்கூர் அரசு பள்ளி பட்டுக்கோட்டை ஜோன் அளவிலான கைபந்து தொடர் போட்டி நடைபெற்றது. இதில் நமதூர் இமாம் ஷாபி பள்ளி 12ம் வகுப்பு படிக்கும் சுஹைல், ஷபீக், ஹாஜா அஃப்ருதீன், தன்வீர் அஹமது, ஆசிப் அலி ஆகிய 6 பேர் மெயின் அணியிலும் நியாஸ், இர்ஷாத், சல்மான், சமீர் அஹமது ஆகியோர் கலந்துகொண்டு விளையாடினர்.

இதில் சிறப்பாக விளையாடிய இவர்கள் இறுதி போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்று பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை தேடி தந்துள்ளனர்.

இந்த தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் தஞ்சை மாவட்ட அளவிலான டிஸ்ட்ரிக்ட் லெவல் தொடர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாணவர்களுக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Advertisement

Close