அதிரையில் ஆட்டம் காட்டிய பலே திருடர்கள் கைது?

அதிரையில் கடந்த வாரம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம் தான் திருடர்களின் தொடர் கொள்ளை. திருடர்களை விரைந்து பிடித்தாக வேண்டும் கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்தன. இதனை அடுத்து போலிஸார் திருடர்களை பிடிக்க தீவிரம் காட்டினர். இதனை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் சந்தேகத்திற்குறிய சிலரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

அவர்கள் திருடர்கள் என நிருபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்குவதன் மூலம் தொடர் திருட்டு சம்பவங்களை ஒழிக்க முடியும்.

Close