Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் தொழுகை அறை வசதியுடன் ஆய்ஷா பல் மருத்துவமனை புதிப்பொழிவுடன் துவக்கம் (படங்கள் இணைப்பு)

திரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் Dr.M.H.ஃபஜ்லுர் ரஹ்மான். பல் மருத்துவரான இவர் அதிரை ஆஸ்பத்திரி தெரு பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகாமையில் ஆய்ஷா என்னும் பெயரில் பல் மருத்துவமனையை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் தற்பொழுது ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளிவாசல் எதிரில் புத்தம் புதிய பொழிவுடன் விசாலமான இட வசதியுடன் பெருநகரங்களில் உள்ளவற்றை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தில் இந்த மருத்துவமனையை துவங்கியுள்ளார்.IMG_3056

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பல் மருத்துவ பரிசோதனைக்கு பட்டுக்கோட்டை நாடி செல்லாமல் அதிரையிலேயே சகல வசதிகளுடனும் நவீன தொழில்நுட்ப கருவிகளுடனும் இந்த மருத்துவமனையை துவங்கியுள்ளார். மேலும் பல் வலி பல் சொத்தை காரணமாக பற்களை பிடுங்காமல் பல் வேர் சிகிச்சை செய்து வலியை குணப்படுத்துவதில் இவர் கை தேர்ந்தவர்.

மேலும் இந்த மருத்துவமனைக்கு வரும் இஸ்லாமிய பெண்கள் தொழுவதற்கு வசதியாக தனியாக தொழுகை அறை வசதியையும் இத்துடன் ஏற்படுத்தியுள்ளார்.

பொதுமக்கள் பல் சிகிச்சைக்காக பல ரூபாய்களை செலவழித்து பட்டுக்கோட்டை, தஞ்சை, சென்னை என்று செல்வதை தவிர்த்து உள்ளூரிலேயே அனைத்து வசதிகளுடன் செயல்படும் ஆய்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.IMG_3051 IMG_3052 IMG_3053
IMG_3061 IMG_3062 IMG_3057 IMG_3058

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy