அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக ஒரே சைக்கிளை ஓட்டி வரும் 76 வயது இளைஞர்!

அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில் உள்ள சாண்ட ரோஸா பகுதியில் வசித்து வருபவர் டாம். 76 வயதை கடந்த இந்த முதியவர் கடந்த 1983 டிசெம்பர் 31 ஆம் தேதி  புதியதாக சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவருடைய வயது 43. சைக்கிள் பயணத்தில் அதீத பிரியம் கொண்ட இவர் தான் வாங்கிய அந்த சைக்கிளை கடந்த 33 ஆண்டுகளாக பாதுகாப்பாக பராமரித்து தினமும் அதிலேயே பயணம் செய்து வருகிறார். இன்றளவும் இந்த சைக்கிள் புதிது போல காட்சியளித்து வருகிறது. நமது நாட்டில் வாங்கிய சைக்கிள்கள் 2-3 ஆண்டுகளுக்கு பிறகு அதன் அடையாளமே தெரியாமல் மாறிவிடும். ஆனால் 33 ஆண்டுகளாக ஒரே சைக்கிளையே பராமரித்து புதியது போலவே ஓட்டி வருவது ஆச்சரியமான விசயம். இந்த சைக்கிள் பயணத்தால் 76 வயதிலும் இளமையாகவே காட்சியளிக்கிறார் டாம்.

நமது நாட்டில் சைக்கிள் ஓட்டினாலே அவமானமாக கருதும் மக்களுக்கு மத்தியில் அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளில் சைக்கிள் பயணத்தை மக்கள் விரும்பி செய்கின்றனர். உடல் பயிற்சி, மாசுக்கட்டுப்பாடு, எரிபொருள் சிக்கனம் உள்ளிட்டவை ஒரே நேரத்தில் கிடைப்பதால் அவர்களுக்கு சைக்கிள் பயணம் ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.

படங்கள்:கலிஃபோர்னியாவில் இருந்து ஜைத் (அதிரை பிறை நேயர்)imageimageimageimage

Close