பாங்கு சொல்வது நாய் குறைப்பதை போன்று உள்ளது என்று கூறிய கேரள காங்கிரஸ் தலைவரால் முஸ்லிம்கள் கொதிப்பு!

imageகேரள காங்கிரஸ் (பி) தலைவரும் முன்னாள் அமைச்சருமாகிய பாலகிருஷ்ணபிள்ளை பத்திரிகையாளர் சந்திப்பில் ”தனது திருவனந்தபுரம் அலுவலகத்தில் இருக்கும் போது அருகில் உள்ள பள்ளி வாசலிலிருந்து வெளிப்படும் பாங்கு சத்தம் நாய் குரைப்பு போல உள்ளது என்றும் 10 கிறிஸ்தவ குடும்பம் ஓரிடத்தில் இருந்தால் உடனே ஆலயங்கள் அமைத்து மைக் மூலம் சத்தம் போடுவது கூட நாய் குரைப்பு போல தான் இருக்கும்” என்று பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தார். கேரளாவில் மதச்சார்பற்ற நிலையை கடைபிடிப்போர் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முஸ்லிம் யூத் லீக்கினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதோடு அறுவறுக்கத்தக்கவகையில் பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.imageimage

Close