பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன தயாரிப்புகளுக்கு எதிராக குவியும் புகார்கள்!

imageபதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத பொருட்களின் விளம்பரத்திற்கு எதிராக 33-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.

மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான துறைக்கு பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத பொருட்களின் விளம்பரங்கள் குறித்து இதுவரை 33 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், பதஞ்சலி நிறுவனத்தின் 21 விளம்பரங்களில் 17 விளம்பரங்கள் விதிமுறைகளுக்கு எதிரான வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

புகார்கள் அனைத்தும் 2015ம் ஆண்டு ஏப்ரம் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் பதிவானவை என்றும் ரத்தோர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுகளில் சிலவற்றிற்கு முகாந்திரம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Close