Adirai pirai
articles இந்தியா

சர்ச்சைகளில் பிரபல யோகா மாஸ்டர்கள்!

imageமுன்பெல்லாம் அமைதியை தேடியும், நினைவாற்றலுக்காகவும் யோகாவை மக்கள் செய்து வந்தார்கள். ஆனால் இந்த யோகா கலையையும் தற்பொழுது அரசியலாக்கியுள்ளது நடப்பு நடுவன் அரசு. அவரவர் விருப்பத்திற்கேற்ப செய்து வந்த இந்த யோகா கலையை மக்களுக்கு கட்டாயப்படுத்தி இந்த யோகாவுக்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து மக்களின் பணத்தை கறியாக்கியதே தவிர மக்களுக்கு இதன் மூலம் பெரிதாக எந்த விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே நிதர்சணமான உண்மை. ஆதிக்க வர்க்கத்தினர் மட்டுமே செய்யும் கலையாக இதனை காட்டியதன் விளைவு யோகாவின் மீது பிற்படுதப்பட்ட, சிறுபாண்மையின மக்களுக்கு ஒருவித வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

அரசின் இந்த தேவையற்ற யோகா விளம்பரங்களால் பயணடைந்தது இருவர் மட்டுமே. ஆம் இருவரும் கார்பரேட் யோகா சாமியார்களான பாபா ராம்தேவ் மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தான். சமீப காலமாக இந்த இரண்டு போலி சாமியார்கள் மீதும் எண்ணற்ற புகார்கள் அடுக்கடுக்காக குவிந்து வருவதை மீடியாக்களில் நம்மால் காணமுடிகின்றது. ஒரு மாட்டு ஜலத்தால் முக்கி எடுத்த பொருட்களை பதஞ்சலி என்று பெயரிட்டு விற்பனை செய்கிறார். இன்னொருவர் பெண்களை அப்பாவி பெண்களை வசியம் செய்து துறவரம் புகச்செய்து அவர்களின் வாழ்க்கையை நாசம் செய்கிறார்.

இவர்களுக்கு விளம்பரம் நிதி உதவி, நில உதவி என்று அப்பாவி மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்கி வரும் மத்திய அரசு இந்த விசயங்களை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. தொடர்ந்து இது போன்று பல முறைகேடுகளில் இவர்களின் சிக்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு பக்கம் தான் பெற்ற இரண்டு மகள்களையும் இழந்து கதறும் பெற்றோர்களை மீடியாக்கள் வெளிப்படுத்தி வந்தாலும் ஈஷா யோகா மையத்திற்க்குள் நடக்கும் நிகழ்வுகள் புரியாத புதிராகவே உள்ளது.

மக்களுக்கு சேவையாற்ற வந்த ஆட்சியாளர்கள் மதவாதிகளுக்கும், கார்பரேட் அதிபர்களுக்கும், கார்பரேட் சாமியார்களுக்கும் துணை புரிவதால் தான் மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். இன்னும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முடிவுராத தொடர்ச்சிகளாகவே இருக்குமோ என்ற அச்சம் நமக்குள் எழுகின்றது.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy