துபாய் விமான விபத்தில் மக்களை காப்பாற்றி தன் உயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர் ஜாசிம்!

imageகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நேரப்படி இன்று மதியம் 12:15 மணியளவில் துபாய் விமான நிலையத்தில் எமிரேட்ஸ் EK251 என்று விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தரையிறக்கப்பட்டது. இதில் முன்புற சக்கரத்தில் பழுது ஏற்பட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் பயணித்த 275 பயணிகள் பத்திரமாக மீட்கப்ட்டனர்.

இருப்பினும் இந்த மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு மக்களை காப்பாற்றிய ராஸ் அல் கைமா வை சேர்ந்த தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முஹம்மது ஹசன் தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

Close