Adirai pirai
தமிழகம்

பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் லாரி மோதியதில் ஒருவர் மரணம்!

பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் அண்ணாத்துரை மகன் அருண்குமார், இன்று மதியம் இவர் தஞ்சை சாலையில் வந்து கொண்டிருந்த போது லாரிகளில் சரக்கினைமொத்தமாக ஏற்றிவந்து நகரில் காலை முதல் இரவு வரை கடைகளில் சில்லரையாக சரக்குகளை இறக்குவதுடன் நகரில் போக்குவரத்து நெரிசலையும், விபத்தினையும் ஏற்படுத்தி வரும் சில்லரை சரக்கு லாரி வழக்கம் போல கடைகளில் சரக்கினை இறக்கிவிட்டு எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை கவணிக்காமல் மோதியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அருண்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

லாரி ஓட்டி வந்தவர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார். பெரும்பாலும் பட்டுக்கோட்டை நகரில் திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இருந்து சில்லரை சரக்குகளை இறக்கும் லாரிகள் நாள் ஒன்றிற்கு 20க்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன. அந்த லாரிகளை லைசன்ஸ் இல்லாத லோடுமேன்கள் தான் பெரும்பாலும் ஓட்டுகின்றனர்.

காரணம் நகர மக்களின் எதிர்ப்பை, சரிக்கட்டுவதற்கு லோடுமேன்கள் லாரிகளை ஓட்டுகின்றனர் லாரி ஓட்டுநர்கள் லாரி புரோக்கர் செட்டுகளில் ஓய்வெடுத்துகொள்வார்கள். இவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தால் ஒழிய இது போன்ற விபத்துக்களையும், போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்க முடியாது என நகரவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்: இந்திரஜித் மாரிமுத்து ராஜாimageimage image image image image