அதிரையரின் ATM PIN நம்பர் கேட்டு தொடர்ந்து கால் செய்து வரும் மோசடி கும்பல்! எச்சரிக்கை!!!

imageஅதிரை கீழத்தெருவை சேர்ந்தவர் இலாஹி. இவருக்கு கடந்த சில நாட்களாக தொலைபேசியில் மோசடி கும்பலின் அழைப்பு வந்துள்ளது. அதில் “நான் இந்தியன் வங்கி மேனேஜர் பேசுகிறேன், உங்களுக்கு ஒரு ஆஃபர் கிடைத்துள்ளது. உங்கள் அக்கவுண்டில் பணம் டெபாசிட் செய்யவுள்ளோம். உங்கள் ATM கார்டின் நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

உடனே சுதாரித்துக்கொண்ட இலாஹி நீங்கள் யார்? நான் எதற்கு தரவேண்டும்? என்று அந்த மோசடி கும்பலிடம் கேட்க அவர்கள் சொன்னவற்றையே மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இவர் அவர்களிடம் தரமுடியாது என்ற கூற அவர்களின் பேச்சு கனமாகவும் சற்றும் அதட்டும் வகையிலும் மாறியுள்ளது.

இது குறித்து இலாஹி அவர்கள் நம்மிடம் கூறுகையில் “என்னிடம் பேசிய அந்த மோசடி நபர் கொஞ்சம் தமிழ் தெரிந்த வட இந்திய நபர் பேசுவது போன்று இருந்தது என்றும், இது போன்று வேறு யாருக்கும் போன் வந்தால் எந்த தகவலையும் வழங்க வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Close