Mi Max என்ற Phablet-ஐ ஜியோமி நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது!

32 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி, 3 GB RAM மற்றும் ஸ்னாப் ட்ராகன் 650 ப்ராஸசர் கொண்ட இந்த சாதனம் 14,999 ரூபாயும் இதே போல 128 GB இன்டர்னல் ஸ்டோரேஜ், 4 GB RAM மற்றும் ஸ்னாப் ட்ராகன் 652 ப்ராஸசர் கொண்ட மற்றொரு சாதனத்தின் விலை 19,999 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த சாதனம், ஜீலை 6 ம் தேதி முதல், Mi.com/in என்ற இணையதளத்தில் விற்கப்படும் . ஜீலை 13 ம் தேதி முதல் பிற வணிக இணைய தளங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.

முழு HD டிஸ்ப்ளே 6.44 அங்குலம் உடைய இந்த சாதனம் இரண்டு வகைகளில் கிடைக்கும். ஒரு வகை, 1.8 GHz hexa-core ஸ்னாப் ட்ராகன் 650 ப்ராஸசர், 3GB RAM மற்றும் 32 GB சேமிப்பு வசதி கொண்டது. மற்றொரு வகை, 128 GB சேமிப்பு வசதி, 4 GB RAM மற்றும் Octa-core ஸ்னாப் ட்ராகன் 652 ப்ராஸசர் மூலம் செயல்படுவது மற்றொரு வகை. ஆன்ட்ராய்டு 6.0 Marshmallow -ல் இயங்கும் இந்த Mi Max சாதனம், விரைவில் MIUI 8 பெறும்.

16 MP கேமராவுடனும், 5 MP முன் கேமரா வசதி உள்ளது, 4.2 புளூடூத், 4G LTE கனெக்டிவிட்டி, 802.11ac வைஃபை, மேலும் இதில் ஹைபிரிட் சிம் ஸ்லாட் வசதியும் உள்ளது, 4850 mAh திறன் கொண்ட பேட்டரி இந்த சாதனத்திற்கு சக்தி ஊட்டுகிறது.

சில்வர், கிரே மற்றும் கோல்ட் ஆகிய வண்ணங்களில் இச்சாதனம் கிடைக்கிறது.

Close