இந்தியாவிலிருந்து மக்காவுக்கு முதல் கட்டமாக புறப்பட்டு சென்ற ஹஜ் பயணிகள்!

இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 1,00,020 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள, ஹஜ் கமிட்டி மூலம் ஏற்பாடு செய்யப்படுவார்கள். இதுமட்டுமில்லாமல், 36 ஆயிரம் பேர் தனியார் மூலம் செல்கிறார்கள். தமிழகத்தில் இருந்து 2,520-க்கும் மேற்பட்டோர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். டெல்லியில் இருந்து 12 ஆயிரத்து 500 பேர் செல்கிறார்கள்.image

இந்நிலையில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 340 பேர் கொண்ட முதல் குழு தலைநகர் புதுடெல்லியில் இருந்து சவுதி அரேபியாவின் மக்கா நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

இதற்கான வழி அனுப்பும் நிகழ்ச்சி புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா, இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் சவுத்திரி மெஹ்பூப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Close