சவூதியில் ஹாஜிகளுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு!

இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையை உலக முஸ்லிம்கள் துவங்கியுள்ளனர். நேற்று முதல் கட்டமாக மக்காவுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஹஜ் பயணிகள் மக்கா சென்றனர். இவர்களை அந்நாட்டு காவல்துறையினர் விமான நிலைய பாதுகாவலர்கள் பூங்கொத்து கொடுத்து அன்புடன் வரவேற்றனர்.

அல்லாஹ் இவர்களின் இந்த மேலான ஹஜ் பயணத்தை ஏற்றுக்கொள்வதோடு, ஹஜ் செய்யாதவர்களுக்கு ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை வழங்குவானாக.

13935151_1108320749240689_7695722400918648838_n 13912741_1108320902574007_6678855685580216123_n

Close