அதிரையை அடுத்த கோட்டைப்பட்டினம் மீனவர்களை காப்பாற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த இலங்கை கடற்படையினர்!

imageஅதிரை அருகே கோட்டைப்பட்டினம் கடற்பகுதி மீனவர்கள் நேற்று முந்தினம் சுமார் 200 விசைபடகுகளில் மீன்பிடிக்க சென்றனர். இதில் நேற்று அனைத்து படகுகளும் கரை திரும்பிய நிலையில் சூசை என்பவரின் படகு மட்டும் கரை திரும்பவில்லை. இதனை அடுத்து இன்று அந்த படகும் அதில் சென்று மூவரும் கரை திரும்பினர்.

இதனை அடுத்து கரை திரும்பிய மீணவர்கள் கூறியதாவது கரையிலிருந்து சுமார் 24 கடல் மைல் தூரத்தில் படகு கவிழ்ந்தது. இதனை அடுத்து இலங்கை கடற்படையினர் இவர்களை காப்பாற்றி, உணவுகள் வழங்கி பத்திரமாக கரை திரும்ப செய்துள்ளனர். இலங்கை கடற்படையினருக்கு மீனவர்கள் அஞ்சி வரும் நிலையில் இலங்கை மீனவர்கள் இந்த செயல்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.image

Close