அதிரையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வேண்டி MLA CV.சேகர் சட்டமன்றத்தில் கோரிக்கை!

imageஇன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.CV.சேகர் அவர்கள் கேள்வி நேரத்தின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் மூலமாக அதிராமப்பட்டினம் மற்றும் மதுக்கூரில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டி தரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.image

சட்டமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவர்களிடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உடனடியாக அங்கு அதிராம்பட்டினம், மதுக்கூர் மெளலானா தோட்டம் ஆகிய இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டி தரப்படும் என்று பேரவை தலைவர் முன்னிலையில் அமைச்சர் உறுதி அளித்தார்.

-R.குழந்தை

Close