அதிரை உள்ளிட்ட 3 பேரூராட்சிகளில் 2 கோடி ரூபாய் செலவில் நீர்நிலைகள் புணரமைக்கப்படும்! அமைச்சர் அறிவிப்பு!

imageஅதிரை உள்ளிட்ட 3 பேரூராட்சிகளில் நீர்நிலைகள் 2 கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் அறிவித்தார். ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது நேற்று MLA க்கள் விவாதித்தனர்.

அவர்களுக்கு அந்த துறைகளின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதலளித்துள்ளார்.   இதில் அவர் அதிரை, மெலட்டூர், பெருமகளூர் பேரூராட்சிகளில் நீர்நிலைகளில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 2 கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Close