Adirai pirai
posts

இரும்பிலே கை வண்ணம் கண்ட……..! ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல்

இரும்பிலே கை வண்ணம் கண்ட……..!ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல் .

MasjidBesi.jpg
மலேசியாவின் புகழ் மிக்க இந்த பள்ளிவாசல் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி எழிலார்ந்த முறையில் கட்டமைக்க மலேஷியாவின் இஸ்லாமிய மேப்பாட்டு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட  பொறுப்பை நல்ல முறையில் நிறை செய்து அழகிய பிரமாண்ட பள்ளிவாசலை 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம்.தேதி மலேஷியா இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை செய்து முடித்தது.
 இதன் அழகு  அருகில் உள்ள ஏரியின் நீரில் பட்டு அதன் பிரதிபலிப்புகள் எதிரொலிக்கும்போது சொக்கிப்போகாதவற்கள் யாரும் இருக்க முடியாது.இந்தக் காட்சி ஒவ்வொருவருக்கும் மனதில் அமைதியையும் மறுமலர்ச்சியையும் தரக்கூடியது.ஒரே நேரத்தில் 20,000.மக்கள் தங்களின் தொழுகையை நிறைவேற்றும் வண்ணம் ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற இஸ்லாமிய மையமாகவும் ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல் விளங்குகிறது.
  இந்த பள்ளிவாசலை கட்டமைக்க 20,மில்லியன் மலேசியன் ரிங்கிட் செலவாகியது.கட்டமைப்பின் 70,சதவீதம் இரும்பால் ஆனது.இதற்கென 6,ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்ட்டது.
 பள்ளிவாசல் உள்பகுதி எப்போதும் ஜில்லென்ற சீதோசன நிலையுடனே இருக்கும்.அது கட்டிட கட்டமைப்பின் சிறப்பு மட்டுமே.ஜில்லென்று இருப்பதற்காக அங்கு குளிரூட்டும் கருவிகளோ மின் விசிறிகளோ இல்லாமலே இந்த செலிப்பை பெறமுடிகிறது.இது கட்டிடத்தின் ஒரு சிறப்பு அம்சம்.
13மீட்டர் உயரத்தில் இழைக்கப்பட்ட கண்ணாடி சுவரில் திருக்குர் ஆன் வசனங்கள் காலியோ கிராபி வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி சுவரின் வலது பக்கத்தில் சூரா இப்ராஹீமின் 7 வசனங்கள் (40 முதல் 47) பொறிக்கப்பட்டுள்ளன.இடது புறம் சூறா அல்பக்ராவின் 5 வசனங்கள் (148-153) பொறிக்கப்பட்டுள்ளன. தொழுகை வளாகத்துக்கு செல்லும் பிரதான பாதையில் அல் இஸ்ராவின் 80 வசனங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.அது மட்டுமின்றி அல்லாஹ்வின் 99 பெயர்களான அஸ்மாவுல் ஹுஸ்னா வெள்ளை கான்கிரீட்டில் காலியோ கிராஃபி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. 
 ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல் கூப்புகள் துருவேராத உயர்  ரக இரும்பினால்      அமைக்கப்பட்டுள்ளது.அல்ட்ரா சானிக் எபெக்ட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பிள் இயற்கை காற்றும்,ஒளியும் உள் நுளையும் வண்ணம் பாங்காக அமைக்கப்பட்டுள்ளன.இது பொதுவாக பெரும்பாலான மஸ்ஜித்களைப்போல அரபிய அல்லது வளைகுடா கட்டிடக்கலையை கொண்டு உருவாக்கப்படவில்லை.ஜெர்மனி மற்றும் சீன கட்டிட கலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.இது மினாராக்கள் இல்லாத பள்ளிவசலாகும்.ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல் ஜந்து அழகிய கட்டமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

    பார்க்கிங் வசதிகள்

 அடித்தளத்தில் 10 யூனிட் இயங்கிகள் இயங்குகிறது.குழந்தைகளுக்கான நூலகம் இங்கு உண்டு.250,பேர் அமர்ந்து விவாதிக்கும் ஹால் உண்டு.முன் பகுதியில் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி.மோட்டார் சைக்கிளுக்கான 79,பார்க்கிங், சைக்கிளுக்கான 30,பார்க்கிங்,பகுதிகள் அனைத்தும் பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளன.இரண்டு மாடி கட்டிடங்கள் பள்ளிவாசல் தொடர்பான அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன.தரை தளத்தில் இரண்டாவது,பகுதி கார் நிருத்துவதற்கான பார்க்கின்ங் நிறுத்தங்கள் இங்கு 180,ஆகும்.

 ஒழு செய்யுமிடம்

 இங்கு தொழுகைக்கு முன்பு உடலை சுத்தப்படுத்தும் ஒழு என்னும் கிரியைக்காக ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித் தனியாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.முதல்தளமான பிரதானமான தொழுகை வளாகமாகும்.இந்த வளாகத்தில் வலப்புறமும் இடபுறமுமாக 12,000.பேர் இங்கு மட்டுமே அமர முடியும் என்றால் இந்த வளாகம் எத்தனை விசாலமானது என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.மேலும் 6000,பேர் உள் பகுதியில் அமர முடியும்.

தொழுகை இடம்

  இரண்டாவது தளம்,இரண்டு தொழுகை வளாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.ஆண்களுக்கு என்றும் பெண்களுக்கு என்றும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.இந்த வழிபாட்டு வளாகங்களில் சர்வ சாதரணமாக 5000,பேர் அமர்ந்து தொழுகையில் பங்கேற்கமுடியும். மூன்றாவது தளத்தில்,பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தொலைகாட்சி மற்றும் வானொலி கட்டுப்பாட்டு அறைகள் இங்கு தங்கள் கடமையாற்றுகின்றன.
 மேலும் மின் தூக்கிகள்,நட்சத்திர விடுதிகளை தூக்கி அடிக்கும் வகையில் நுழைவு வாயில்கள்,பிரமாண்ட தாழ்வாரங்கள்,மாடிபடிக்கட்டுகள்,நகரும் ஏணிகள்,விருந்தினர்களை வரவேற்க தணி கவுண்டர்கள்,உணவு வழங்க மற்றும் மோதினாருக்கான தனி தனி,அறைகள்,வி.ஐ.பி,பிரமுகர்களுக்கான அறைகள்,இறந்தவர்களுக்கு இறுதி கிரியைகள் செய்வற்கு ஏற்ற அறைகள்,நிர்வாக அலுவல்களை மேற்கொள்ளும் அறைகள் என மிக்க வைக்கும் அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. துயான்க் மிசான் ஜைனுல் ஆபிதீன் பள்ளிவாசல்.

Advertisement