’பசுக் காவலர்கள்’ அமைப்பின் தலைவர் மீது வழக்குப் பதிவு

gaurakshak-696x489பஞ்சாப் மாநிலம், காவ் ரக்‌ஷா தள் என்னும் பசுக் காவலர்கள் அமைப்பின் தலைவர் சதீஷ் குமார் மீது, குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பாட்டியாலா காவல் கண்காணிப்பாளர் குர்மீத் சவுகான் தெரிவித்துள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 382, 384, 323, 341, 148, 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் சதீஷ் குமார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமையன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் மோடி, ”பசுக் காவலர்களின் செயல் என்னை ஆத்திரமூட்டுகிறது. இரவில் கிரிமினல்களாகவும், பகலில் பசுக் காவலர்கள் போன்ற உடையை அணிந்து கொண்டு செயல்படுபவர்கள் மீதும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Close