சவூதி விசா குறித்து அரசு அறிவித்துள்ள அதிரடி கட்டண மாற்றங்கள்!

சௌதி அரேபிய அரசின் விசா கட்டணம் மற்றும் புதிய விதி முறைகள்.

(எம்பிளாயின்மெண்ட்)தொழிலாளர்கள் விசாக் கட்டணம் 2000 ரியால்கள்

முதல் முறை செல்லும் உம்ரா மற்றும் ஹஜ் பயணிகளுக்கு அக்கட்டணம் கிடையாது.

வணிகர்கள் தொழில் நிமித்தம் சௌதி வருவோருக்கு 6 மாத பன்முறை(மல்டிபில்) விசா 3000 ரியால்கள், 1 வருடம் 5000 ரியால்கள்; 2 வருடம் 8000 ரியால்கள்.

சௌதி டிரான்சிட் விசா( தற்காலிக) 300 ரியால்கள்

துறைமுகம் வழியாக டிபார்ச்சர் விசா 50 ரியால்கள்.

சிங்கிள் ரீஎன்ரி விசா 200 ரியால்கள் 2 மாதங்களுக்கு மட்டும். கூடுதல் ஒவ்வொரு மாதத்திற்கும் 100 ரியால்கள்.

மல்டிபில் ரீ என்ரி விசா 500 ரியால்கள், 3 மாதங்களுக்கு மட்டும். (முன்பு 6 மாதங்களுக்கு 500ரியால்) மேலதிகமாக ஒவ்வொரு மாதத்திற்கும் 200 ரியால்கள்.

தனது இக்காமா அல்லது டிரைவிங் லைசன்சை யாரேனும் அடமானம் வைத்தால் அவர்களுக்கு 1000 ரியால்கள் அபராதத் தொகை விதிக்கப்படும்.

கார்களைக் கொண்டு சாலைகளை சருக்கல் விளையாடுவோருக்கு 20,000 ரியால்கள் அபராதம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்படும்.

Close