சவுதியில் சிக்கித்தவித்த இந்தியர்கள் இஸ்லாமிய மன்றம் உதவியால் இந்தியா வருகை

சவுதியில் மாதந்தோறும் சம்பளமாக 800 சவுதி ரியாலும், உண்ண உணவும், இருப்பிட அனுமதியும் கிடைக்கும் என்ற கனவுடன் இந்திய ஏஜென்ட் ஒருவரின் உதவியுடன் சவுதிக்கு வந்த 13 இந்தியத் தொழிலாளர்கள் அதன்பின்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்தனர்.

ஒரு காபி விடுதியில் பணியாளர் வேலை என்று கூறி அழைத்து வரப்பட்ட அவர்கள் அங்கு கிடைத்த வேலையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது.

 தங்களின் விமானப் பயணத்திற்கும், விசா அனுமதிக்கும் 7000 ரியால் செலவழித்து வந்த அவர்களுக்கு ஆறு மாதமாக சம்பளமும் வராத நிலையில் இவர்கள் உதவி கோரி இஸ்லாமிய கலாச்சார மன்றம் ஒன்றை அணுகினர்.

சமூக சேவை மையமாகவும் செயல்பட்டுவரும் இந்தமன்றம் சவுதியில் இவர்களை வேலைக்கு அமர்த்திய ஏஜெண்டை அணுகி இவர்களுக்கு உதவி புரிய வேண்டியுள்ளனர்.

இதனைததொடர்ந்து அவர்களின் சம்பள பாக்கியைப் பெற்றுத்தருவதாகவும், இந்திய ஏஜென்ட் அவர்கள் நாடு திரும்ப விமானப் பயணத்துக்கான கட்டணத்தை செலுத்துவார் என்ற நிபந்தனையுடன் அவர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பவும் சவுதியின் ஏஜென்ட் ஒப்புக்கொண்டுள்ளார் என்று அம்மையத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Close