சென்னையில் ரயில் நிலையத்தில் அபுல் கலாம் என்ற வாலிபரை தீவிரவாதி என்று விசாரத்த போலிசார்!

terrorist_4எழும்பூர் ரயில் நிலைய நடைமேம்பாலம் வழியாக சென்றவரை, தோற்றத்தின் காரணமாக தீவிரவாதி என டிக்கெட் பரிசோதகர் சித்தரித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் அபுல்கலாம். எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு, எதிர்புறம் உள்ள பகுதிக்கு, நடைமேம்பாலம் வழியாக சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு நின்றிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர், அபுல்கலாமை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, அதிகாரிகளிடம் தீவிரவாதி என அறிமுகம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் விழுப்புரத்தில் இருந்து சென்னை வரை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததற்கான அபராதமும் அபுல் கலாமிடம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. 13900313_10208630078362005_8924769744963203325_n

Close