ஒலிம்பிக்கில் இஸ்ரேல் வீரரிடம் கைகுழுக்க மறுத்த எகிப்து வீரர் இஸ்லாம் அல் ஷாஹிபி!

Publication42016 ஒலிம்பிக் தொடர் போட்டி ப்ரேசில் தலைநகர் ரீயோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஜூடோ போட்டியில் எகிப்து வீரர் இஸ்லாம் அல் ஷாஹிபி இஸ்ரேலிய வீரர் ஆர் ஸாஸ்ஸானை எதிர்த்து விளையாடினார். இதில் இஸ்ரேலிய வீரர் வெற்றி பெற்றார். இருப்பினும் அதிகம்  பிரபலமடைந்தது எகிப்து வீரர் தான். காரணம்! விளையாட்டு வீரர்களின் மரபான கைக்குலுக்க இஸ்ரேலிய வீரர் முன்வருகையில் எகிப்பு வீரர் கைகுழுக்க மறுத்தார்.

எகிப்து நாட்டின் பல பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இதற்க்கு தன்னுடைய எதிர்ப்பை காட்டுவதற்காகவே எகிப்து வீரர் இவ்வாறு செய்தார் என பரவலாக கூறப்படுகிறது.

Close