Adirai pirai
தமிழகம்

திருச்சி விமான நிலையத்தில் ஶ்ரீரலங்கன் ஏர்லைன்ஸ் விமான எஞ்சினில் கோளாறு! 146 பயணிகள் உயிர் தப்பினர்!

திருச்சியில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சிக்கும், இலங்கை தலைந கர் கொழும்புக்கும் இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை ஸ்ரீலங்கன் விமானம் 146 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானம் புறப்பட அனுமதியும் தரப்பட்டது. அப்போது, பைலட் விமானத்தின் அனைத்து பாகங்களையும் இயக்கி சோதித்து பார்த்தார். இதில், விமானத்தின் வால் பகுதியில் விமானத்தை மேலே எழும்பி பறக்க வைக்கும் கருவியான எலிவேட்டரில் பழுது ஏற்பட்டிருந்ததை கண்டு பிடித்தார்.

இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். பின்னர் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு அருகில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, எலிவேட்டரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் இன்ஜினியர்கள் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாலையில் கொழும்பு சென்ற மற்றொரு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.