Adirai pirai
தமிழகம்

காவி கம்பத்தில் கொடியேற்ற முயன்ற பா.ஜ.க தலைவர் தமிழிசை! கடும் பரபரப்பு!

imageசென்னையில் காவி வண்ணம் பூசிய கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற முயற்சி செய்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் பாஜக சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்நது. ஆனால் தேசிய கொடியேற்றும் கம்பத்தில் காவி நிறம் பூசப்பட்டிருந்ததால் இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவி நிறம் பூசப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டு, வேறு புதிய கொடிக்கம்பம் நடப்பட்டது. பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

Courtesy: NEWS7

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy