முத்துப்பேட்டையில் பென்சன் கிடைக்காமல் கஷ்டப்படும் நேதாஜியின் நண்பர் தியாகி முஹம்மது தாவூது மணைவி!

imageதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை  பேட்டை சாலையில் வசித்து வந்தவர் சுதந்திர போராட்ட தியாகி டாக்டர் கே.எஸ்.முகமது தாவுது(99). ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த ஐஎன்ஏ படையில் தீவிரமாக பணியாற்றியவர். ஒருமுறை பர்மாவில் நடந்த முகாமுக்கு மாறுவேடத்தில் வந்த நேதாஜியை உள்ளே விட தியாகி முகமது தாவுது மறுத்துள்ளார். பின்னர் வேடத்தை கலைத்த பிறகு தான் நேதாஜியை முகாமிற்குள் அனுமதித்துள்ளார். அன்று முதல் நேதாஜிக்கு நெருங்கிய நண்பராக விளங்கினார்.

தமிழக அரசின் தியாகிகள் பென்ஷன் வாங்கி வந்த முகமது தாவுது கடந்த 2015ம் ஆண்டு இறந்தார். அதன் பின்னர் 17 மாதங்கள் ஆகியும் அவரது மனைவி சபுரா அம்மாளுக்கு பென்ஷன் கிடைக்கவில்லை. பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இது குறித்து சபுரா அம்மாள் கூறுகையில், நாட்டிற்காக பாடுபட்ட எனது கணவரின் தியாகத்தை நினைத்து பார்த்து கூட எனக்கு உதவி தொகையை வழங்க முன்வராத அதிகாரிகளை கண்டு வேதனைப்படுகிறேன் எனக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகையை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

Close