5 கவுன்சிலர்கள் ஆதரவுடன் 5 மணிக்கு முடிவுற்றது அதிரை பேரூராட்சி உள்ளிருப்பு போராட்டம்!

14030939_307498036266915_1779064968_nஅதிரை பேருராட்சிக்கு உட்பட்ட சில வார்டுகளில் பேரூராட்சியின் 2016-17 ஆம் நிதியாண்டுக்கான பேரூராட்சி பொதுநிதியை ஒதுக்காத காரணத்தால் பேரூராட்சி நிர்வாகத்தினை கண்டித்து பேரூராட்சி அலுவலத்தில் வார்டு கவுன்சிலர்களால உள்ளிருப்பு பேராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்று கவுன்சிலர்கள் பலரும் இதில் கலந்துக்கொள்ள வரவில்லை. இதனால் அதிரை 14 வது கவுன்சிலர் முஹம்மது ஷரீப் அவர்கள் தனி நபராக இந்த உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கினார்.

இதனை அடுத்து பகல் முன்று மணியளவில் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் 8வது வார்டு கவுன்சிலர் சேனா மூனா ஹாஜா முஹைதீன், 12 வது வார்டு கவுன்சிலர் நூர் லாட்ஜ் செய்யது, 16 வார்டு கவுன்சிலர் யூசுப், 21வது வார்டு கவுன்சிலர் ஆப்பிள் இப்ராஹிம் அவர்கள் இதற்க்கு ஆதரவு தெரிவித்து கலந்துக்கொண்டனர்.

இப்போராட்டம் மாலை 5 மணியுடம் முடிவுற்றது. இதனை அடுத்த உள்ளிருப்பு போராட்டத்தை எப்பொழுது நடத்துவது என்பது குறித்து வரும் திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என இப்போராட்டத்திற்கான ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஷரீப் நம்மிடம் கூறினார்.

Close