அதிரையில் பெண்ணை வழிமறித்து காரில் ஏற வற்புறுத்திய மர்ம நபர் யார்? ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை தகவல்!

facebook-strangerஅதிரை பழஞ்செட்டித்தெரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆஸ்பத்திரி தெரு செல்லும் சாலையில் பெருமாள் கோவில் அருகே உள்ள பாதையில் அதிரையை சேர்ந்த ஒரு பெண்மனி இன்று மாலை சுமார் 5 மணியளவில் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த வழியாக வந்த சிறிய அளவிலான சாம்பல் நிற கார் ஒன்று வந்த அந்த பெண்ணின் அருகாமையில் நின்றுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண்மனியில் அந்த காரில் இருந்த ஒரு நபர் “நீங்கள் பட்டுக்கோட்டைக்கு செல்கின்றீர்களா?” என்று கேட்டுள்ளார். அந்தப்பெண்ணும் ஆம் என்று கூறவே அந்த நபர் “நீங்கள் இந்த காரில் தான் வரவேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளார். அதற்கு அப்பெண் நீங்கள் யார்? உங்களை யார் என்றே தெரியாது… என்னை ஏன் அழைக்கின்றீர்கள்? என்று கேட்க அந்த மர்ம நபரும் மீண்டும் வற்புருத்தியுள்ளார்.

ஆனால் அந்த பெண் அதை காதில் வாங்காமல் பட்டுக்கோட்டைக்கே செல்ல மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து அந்த பெண்மனி சேர்மன் அஸ்லம் அவர்களிடம் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து எச்சரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த மர்ம நபர் குறித்து அந்த பெண் கூறியதாவது அவர் அதிரை சேர்ந்தவர் போன்று இல்லை, வாய் முழுவதும் பெரிய பற்கள், மற்றும் பெண்களை கடத்தி கொண்டு போய் தவறு செய்யும் நபர் போன்ற உருவம் கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார்.

வெளியூர்களில் கேள்விபட்ட செய்திகள் அதிரையிலும் அரங்கேற துவங்கிவிட்டன. அனைத்த் பெண்களும் சற்று எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Close