740 கோடி ரூபாய் செலவில் பிரம்மாணடமாக விரிவுபடுத்தப்பட இருக்கும் திருச்சி விமான நிலையம்!

imageதிருச்சி சர்வதேச விமான நிலையம் ரூ.740 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குனர் ஆர்.குணசேகரன் தெரிவித்தவை பின்வருமாறு:-

திருச்சி விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் ஓடுபாதையை விரிவுபடுத்த 510 ஏக்கர்கள் நிலம் தேவை. இதில், 370 ஏக்கர்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டது. தேவையான ஆவணங்களை சமர்பித்த பிறகு மீதமுள்ள நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது. புதிய விரிவாக்க திட்டத்தை கையாளுவதற்கு ஒரு ஆலோசகரையும் நியமிக்க திட்டமிட்டுள்ளோம். விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும் மார்ச் 2017-க்குள் விரிவாக்க பணிகள் துவங்கிவிடும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு குணசேகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையம் ஒரு ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Close