அதிரையில் அடிக்கடி தடை செய்யப்பட்டு வரும் BSNL இணையதள சேவை!

அதிரையை பொருத்தவரை அதிக அளவில் இணையதள சேவையை பயன்படுத்தும் ஒரு நகரம். நமதூரில் ஸ்மார்ட் போன்கள் மூலமாக செல்பேசி நிறுவனங்கள் வழங்கி வரும் இணையதள சேவையையும், வை ஃபை, ப்ராட்பேண்ட் மூலமாக கணினி உள்ளிட்டவற்றிலும் மிகையாக பயனபடுத்தி வருகிறார்கள்.

இதில் வை பை, ப்ராண்ட்பேண்ட் சேவையை பொருத்தவரை தனியார் சேவைகளுக்கு இணையாக BSNL இணையதள இணைப்பையும் பெற்றுள்ளனர். ஆனால் இந்த இணைப்பை பெற்றுள்ள பலரும் அதன் சேவையை சரிவர பெறுவதில்லை என்பதே உண்மை. காரணம், அதிரையில் அவ்வப்போது நமதூரில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணிகள், தற்பொழுது நடைபெற்று வரும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றால் நிலத்தடியில் செல்லும் BSNL இணைப்பு கம்பிகள் வெட்டப்பட்டு விடுகின்றன. இந்த கால்வாய், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நண்மையை தந்தாலும் இதன் காரணமாக வெட்டப்பட்ட இணைப்புகளில் உள்ள பயணர்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு இணையதள இணைப்பு இல்லாமல் போய்விடுகிறது. இஇதனால் பயணர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறனர்.

இன்று முழுவதும் அதிரையின் சில பகுதிகளில் இது போல் இணையள சேவை தடைசெய்யப்பட்டது. எனவே இது குறித்து அதிரை BSNL கிளையினர் கருத்தில் கொண்டு இதற்க்கு ஒரு நல்ல தீர்வை எடுத்தால் மட்டுமே ஊரில் BSNL சேவைகளை மக்கள் பயண்படுத்த விரும்புவார்கள்.

Close