மாநில அளவிலான கட்டுரை போட்டியை நடத்தும் அதிரை ஈத் மிலன்!

imageகடந்த வருடங்களை போல் இந்த வருடமும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் எதிர்வரும் 18-09-2016 அன்று அனைத்து சமுதாய பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் பெருநாள் சந்திப்பு – சமுக நல்லிணக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் மாபெரும் மாநில அளவிலான கட்டுரை போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெரும் சிறந்த சாதனையாளர்களுக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயம், இரண்டாம் பரிசாக 3 கிராம் தங்க நாணயம், மூன்றாம் பரிசாக 2 கிராம் தங்க நாணயம், ஆறுதல் பரிசாக தலா 2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் 17 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

போட்டி விதிமுறைகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் குறித்து தகவல்கள் அதிரை ஈத்மிலன் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:

பேராசிரியர் செய்யது அஹமது கபீர் 8883184888
கமலுதீன் 9952130909
பேராசிரியர் பிரேம் நவாஸ் 9894845461
பேராசிரியர் அப்துல் ரஹ்மான் 9791911120
பேராசிரியர் சுலைமான் 8825575374

தகவல்: ஈத் மிலன் கமிட்டி

Close