இஸ்லாத்தில் தற்கொலை முற்றிலும் தடுக்கபட்டுள்ளது: தற்கொலை செய்பவர்களுக்கு நரகம் நிரந்தரம்! 

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! –அல் குர்ஆன்(2:195)
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

.

(அல்குர்-ஆன் 4 : 93.)ஒரு உயிரை வரம்பு மீறி கொலை செய்வது எப்படி குற்றமோ, அதைப் போல ஒருவர் தனது உயிரை தானே மாய்த்துக் கொள்வதும் கொலை செய்வதில் அடங்கும். முஃமினான உயிரை வேண்டுமென்றே கொலை செய்பவருக்கு கூலி நரகம். அதில் அவர் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே தற்கொலை செய்தவருக்கு நிரந்தர நரகம் என்று இந்தத் திருக்குர்ஆன் வசனத்தின் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம். மேலும், இதே எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்களும் சொல்லிக் காட்டுகின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.


Close