அதிரையில் சிறுமியிடம் தங்க செயின் பறிப்பு!

imageஅதிரை SAM நகர் அருகில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் ஒரு சிறுமி தனது வீட்டின் அருகாமையில் நின்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகம் ஒன்றில் சென்ற இளைஞர்கள் மூவர் தங்கள் கைகளில் வைத்திருந்த புறாவினை அந்த சிறுமியிடம் காட்டி பாசாங்கு செய்வது போல் காட்டி அந்த சிறுமி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுள்ளனர்.

மேலும் அந்த இளைஞர்கள் பஜாஜ் பல்ஸர் பைக்கில் வந்தனர் என்று கூறப்படுகிறது. அதிரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த திருட்டு குற்றங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

Close