102 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்க்கும் “பாம்பன் பாலம்” (படங்களின் தொகுப்பு)

பாம்பன் பாலம் வரலாறு :
1876ல் ஆங்கிலேயர்கள் இந்தியா இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 ல் டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது.

பாலத்தின் அமைவிடம் :
தமிழகத்தின் பெரும் பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தை இருவழிப் பாலம் என்று கூட அழைக்கலாம்.

பாலத்தின் அமைப்பு :
ரயில்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டால் கப்பல் போக்குவரத்து தடைபடும், இதனை கருத்தில் கொண்டு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும் தடைபடாதவாறு கட்டப்பட்ட பாலம் தான் பாம்பன் பாலம். இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் பாலத்தை 146 தூண்கள் தாங்கி நிற்கின்றது.

5000 டன் சிமென்ட், 18 ஆயிரம் டன் இரும்பு, 18 ஆயிரம் டன் ஜல்லி கற்கள் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டன.

பாலம் தூண்கள் அமைப்பதற்கான கற்கள் 270 கி.மீ தூரத்தில் இருந்தும், மணல், 110 கி.மீ தூரத்தில் இருந்தும் கொண்டு வரப்பட்டன.

270 அடி நீளம் கொண்ட தூக்கு பாலத்தில் இரு தூக்கிகள் உள்ளன. ஒன்றின் எடை 100 டன்.

2.3 கி.மீ தூரத்தில், இந்த பாலத்தை கடந்து, மாதம் சராசரியாக பத்து கப்பல்கள் செல்கின்றன.

1974 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தரைப் பாலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு 1988ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதை அன்றைய பாரதப் பிரதமர் இராஜீவ் காந்தி திறந்து வைத்தார்.

பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும், இருப்பினும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது.

சிறப்புகள் :
நீரணையின் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், இராமேசுவரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும்.

இந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பாம்பன் ரெயில் பாலத்துக்கு நூறு வயதிற்கு மேல் ஆகிறது. 2014ம் ஆண்டு ஜனவரி 28ல், நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

பழந்தமிழரின் வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாம்பன் பாலத்தை இன்னும் பல நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதுடன், அதனை பாதுகாப்பதும் நமது கடமையாகும்.image image image

படங்கள்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close