சென்னையிலிருந்து முதல்கட்டமாக ஹஜ் கமிட்டி மூலம் புறப்பட்ட ஹாஜிகள்

imageஇஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 1,00,020 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள, ஹஜ் கமிட்டி மூலம் ஏற்பாடு செய்யப்படுவார்கள். இதுமட்டுமில்லாமல், 36 ஆயிரம் பேர் தனியார் மூலம் செல்கிறார்கள். தமிழகத்தில் இருந்து 2,520-க்கும் மேற்பட்டோர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் புறப்பட்டு செல்கின்றனர். அந்த வகையில் இன்று முதல்கட்டமாக 300 க்கும் அதிகமான பயணிகள் புறப்பட்டு சென்றனர்.

Close