அதிரையில் சிறுமியின் செயினை பறித்த சிறுவர்கள் சிக்கினர்

imageஅதிரை SAM நகர் அருகில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஒரு சிறுமி தனது வீட்டின் அருகாமையில் நின்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகம் ஒன்றில் சென்ற இளைஞர்கள் மூவர் தங்கள் கைகளில் வைத்திருந்த புறாவினை அந்த சிறுமியிடம் காட்டி பாசாங்கு செய்வது போல் காட்டி அந்த சிறுமி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் சிக்கியுள்ளனர். இவர்கள் மூவரும் 7,8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

Close