முஸ்லிம் பெயரில் போலி பேஸ்புக் ஐடி துவங்கி பா.ஜ.க வினரை திட்டிய அஜய் குமார்!

உத்தர பிரதேசத்தில் உள்ளூர் மசூதி தலைவர் ஒருவரது பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கினை தொடங்கி அதன் வழியே பாரதீய ஜனதா தலைவர்களை மிரட்டும் வகையிலான செய்திகளை பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அஜய் குமார் என்ற அந்நபர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அவர் உள்ளூர் மசூதி ஒன்றின் மத தலைவர் மவுலானா ஷோகின் என்பவர் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார்.

அதன்வழியே, பாரதீய ஜனதா எம்.பி. ஹகும் சிங், பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சுரேஷ் ராணா, பஜ்ரங் தள தலைவர் விவேக் பிரேமி ஆகியோரை மிரட்டும் வகையில் செய்திகளை பதிவு செய்து வந்துள்ளார். இதனை அடுத்து மவுலானா போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஷாம்லி பகுதியில் தனது வீட்டில் இருந்த அஜய் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவரால் பதிவு செய்யப்பட்ட செய்திகள் மற்றும் கருத்துகளில் உள்ளூர் இந்து அமைப்பினர் பெயர்களும் இடம் பெற்றிருந்துள்ளன.

Close