கட்டுமாவடி கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றி கலக்கிய அதிரை ABCC! (படங்கள் இணைப்பு)

imageகட்டுமாவடியில் கடந்த சில நாட்களாக மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல தலைசிறந்த அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின. அந்த வகையில் அதிரை கடற்கரைத் தெரு ABCC கிரிக்கெட் அணியினரும் இதில் விளையாடினர். 25,000 ரூபாய் முதல் பரிசாக கொண்ட இத்தொடரில் இந்த அணி ஆரம்ப சுற்றுகளில் இருந்த பல அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்றைய தினம் இத்தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ABCC அணியை எதிர்த்து கட்டுமாவடி அணி விளையாடியது. இதில் அதிரை ABCC அணி ஆபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையையும் 25,000 ரூபாய் பரிசையும் தட்டிச்சென்றனர்.

பல தலைசிறந்த அணிகளுக்கு மத்தியில் ஆபாரமாக விளையாடி வெற்றி பெற்ற அதிரை ABCC அணிக்கு அதிரை பிறையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

முதல் பரிசு- அதிரை ABCC

இரண்டாம் பரிசு-கட்டுமாவடி

மூன்றாம் பரிசு-கோட்டைப்பட்டினம்

நான்காம் பரிசு-பிராமண வயல்

5ஆம் பரிசு-நாகுடி

image image image image

Close