முத்துப்பேட்டையில் தொடரும் பைக் திருட்டு! CCTV கேமராவில் திருடனின் உருவம் பதிவு!

14053997_539476769583289_3342035702635516291_nதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் சமீபகாலமாக பைக் திருட்டு அதிகரித்துள்ளது. மேலும் பல பைக்குள் திருடப்பட்டு குளத்திலும் ஆறுகளிலும் வீசப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பைக் திருடி விற்கும் கும்பலும், இதனுடன் பிடிக்காதவர்களின் பைக்குகளை திருட்டி ஆறு மற்றும் குளத்தில் வீசும் கும்பல் ரகசியமாக உலாவி வருகின்றனர்.

இதனால் முத்துப்பேட்டை பகுதியில் பைக் வைத்திருப்பவர்கள் கடும் பீதியில் உள்ளனர.; மேலும் வீடுகள் மற்றும் கடைகள் வாசலில் பைக் நிறுத்தும் போது கவனமாக இருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு அலி என்பவரின் பைக் பெரிய கடைதெருவில் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று திரும்பி பார்த்தபோது திருடப்பட்டது. அதேபோல் மரைக்காயர் தெருவில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்ட தவுபிக் என்பவரின் பைக் திருடப்பட்டது. இவைகள் அணைத்து கண் இமைக்கும் நேரத்தில் திருடப்பட்டதாகவும் இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் சில தினங்களுக்கு முன்பு பேட்டை போலீஸ் செக்போஸ்ட் அருகே செல்லும் கோரையாற்றில் ஒரு பைக் கண்டு எடுக்கப்பட்டது குறிப்பிட்டதக்கது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்டார் வணிக வளாகம் பகுதியில் நிறுத்தப்பட்ட கரையங்காட்டை சேர்ந்த கவியரசன் என்பவரது புதிய அப்பாச் பைக் திருட்டு போனது. இந்தநிலையில் அந்த வளாகத்தில் ஒரு அரசு உடமையாக்கப்பட்ட வங்கி, இரண்டு வங்கிகளின் ஏ.டி.எம் பூத், ஒரு நிதி நிறுவனம், ஒரு லாஜ் மற்றும் முக்கிய வியாபார நிறுவனங்கள் உள்ளன. இதனால் வளாகம் முழுவதும் அந்த அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இப்படி இருந்தும் துணிச்சலுடன் திருட்டு போனது அங்குள்ளவர்களை அதற்சிக்குள்ளாகி உள்ளது.

இந்தநிலையில் பைக் திருடனின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதில்.. பைக்கின் உரிமையாளர் அங்குள்ள செல் கடை வாசலில் இருத்திவிட்டு பைக்கில் அமர்ந்தபடி போன் பேசுகிறார்.. பின்னர் பேசிக்கொண்டே கடைக்குள் சென்றுவிடுகிறார்.. பின்னர் தூரத்தில் இதனை கவனிக்கும் திருடன் அதேபோல் போன் பேசுவதுபோல் வருகிறான்.. பின்னர் நிறுத்தப்பட்ட அந்த பைக்கின் மீது அமர்ந்து பேசுகிறான்.. பின்னர் பேசியபடி பைக்கின் உரிமையாளர் கடையில் என்னா செய்கிறார் என்று எட்டி பார்க்கிறான்.

அவர் வர லேட்டாகும் என்பதை உறுதி செய்த திருடன் செல்லில் பேசுவது போன்றே மீண்டும் பைக் மீது ஏறி அமர்ந்து கிக்கரால் ஸ்டாட் செய்து தடுமாறிய படி ஓட்டி செல்கிறான்… இந்த துல்லியமான காட்சிகள் அங்குள்ள ஒரு லாஜ் வாசலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைக்கண்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் கேமராவில் சிக்கிய இந்த திருடனின் உருவத்தை பார்த்த சிலர் அந்த திருடனை சில தினங்களாக இப்பகுதியில் சுற்றி திரிந்ததை பார்த்ததாக கூறுகின்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.14117804_539476766249956_7209656343945083555_n

செய்தி மற்றும் படங்கள்: முஹைதீன் பிச்சை

Close