ஏர்டெல் அதிரடி : 10ஜிபி 4ஜி இண்டர்நெட் ரூ.250 சலுகை அறிவிப்பு.!

சாம்சங் ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை
வாங்குவோருக்கு 10 ஜிபி 4 ஜி டேட்டா
வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம்
அறிவித்துள்ளது. இந்தச் சலுகை ஏற்கனவே
ஏர்டெல் பிரீபெயிட் பயன்படுத்துவோர் மற்றும்
புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏர்டெல்
வாடிக்கையாளர்கள் 10 ஜிபி 4ஜி டேட்டா
பயன்படுத்த ரூ.250 செலுத்தினால் போதும். கேலக்ஸி ஜெ சீரிஸ் இந்தச் சலுகை தேர்வு செய்யப்பட்ட சாம்சங்
கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு
மட்டுமே வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை இருந்தும் சாம்சங் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்
சார்பில் எந்தெந்த கருவிகளில் இந்தச் சலுகை
வழங்கப்படும் என்ற தகவலை வழங்கவில்லை. ஏர்டெல் புதிய கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை
பயன்படுத்துவோர் நேரடியாக ஏர்டெல்
நிலையங்களுக்குச் சென்றோ அல்லது
www.offers.airtel.com என்ற இணைய
முகவிரியில் லாக் இன் செய்தோ சலுகையை
பெற முடியும். ஏர்டெல் 3ஜி ஏர்டெல் 3ஜி இண்டர்நெட் சேவையை
பயன்படுத்துவோருக்கு 10 ஜிபி 3ஜி டேட்டா
வழங்கப்படுகின்றது. இதில் 1 ஜிபி பகலிலும் 9
ஜிபி இரவிலும் பயன்படுத்த முடியும் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் ஜியோ 4ஜி வெளியாக இருப்பதைத்
தொடர்ந்து வாடிக்கையாளர்களைக் கவரும்
நோக்கில் இது போன்ற சலுகைகள்
அறிவிக்கப்படுகின்றது. புதிய சலுகை ஏற்கனவே ஐடியா மற்றும் வோடபோன்
போன்ற நிறுவனங்களும் தங்களது இண்டர்நெட்
சேவையில் புதிய சலுகைகளை அறிவித்ததும்
குறிப்பிடத்தக்கது.

IMG_4094.JPG

IMG_4095.JPG

Close