Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

இரண்டாக உடைகிறது பட்டுக்கோட்டை வட்டம்!

pkt broken adirapirai.inதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இதுகுறித்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ஆர். குருமூர்த்தி பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ள அறிக்கை விவரம்:
பட்டுக்கோட்டை வட்டத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,90,965 பேர். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத் தலைமை இடமாகவும், சட்டப்பேரவைத் தொகுதியாகவும் உள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் தற்போது பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (முழுமை), மதுக்கூர் (முழுமை), சேதுபாவாசத்திரம் (பகுதி), திருவோணம் (பகுதி), பேராவூரணி (பகுதி) என 5 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியக்கோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 10 பிர்க்காக்கள், 175 வருவாய் கிராமங்கள், 103 ஊராட்சிகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக, பட்டுக்கோட்டை வட்டத்தை பட்டுக்கோட்டை மேற்கு, பட்டுக்கோட்டை கிழக்கு என இரண்டு வட்டங்களாகப் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 வட்டங்களுக்கும் பட்டுக்கோட்டையே தலைமை இடமாக இருக்கும்.
இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, 2 புதிய வட்டங்கள் குறித்த விவரம்:
பட்டுக்கோட்டை மேற்கு: இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,87,054. பட்டுக்கோட்டை நகராட்சி, பட்டுக்கோட்டை (பகுதி), சேதுபாவாசத்திரம் (பகுதி), பேராவூரணி (பகுதி), திருவோணம் (பகுதி) ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், பட்டுக்கோட்டை, நம்பிவயல், திருச்சிற்றம்பலம், குறிச்சி, ஆண்டிக்காடு ஆகிய 5 பிர்க்காக்கள், 100 வருவாய் கிராமங்கள், 54 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.
பட்டுக்கோட்டை கிழக்கு: இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,03,911. மதுக்கூர் (முழுமை), பட்டுக்கோட்டை (பகுதி) ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள், மதுக்கூர், அதிராம்பட்டினம் ஆகிய 2 பேரூராட்சிகள், மதுக்கூர், பெரியகோட்டை, தம்பிக்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம் ஆகிய 5 பிர்க்காக்கள், 75 வருவாய் கிராமங்கள், 49 ஊராட்சிகள் இவ்வட்டத்தில் இடம்பெறும்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy