சவூதியில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

imageசவூதி பின்லாடின், சவூதி ஓஜர், அல் ஸாத் ஆகிய பெருநிறுவனங்களில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களுக்கு,நிலுவையிலுள்ள சம்பள பாக்கியைச் செலுத்துவதற்கு சவூதி மன்னர் 100 மில்லியன் சவூதி ரியால்களை ஒதுக்கியுள்ளதோடு, அவர்கள் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் தடையில்லாத வகையில் ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த மாதம் (செப்டம்பர்) 25 ஆம் தேதிக்குள் வேலையிழந்த இந்தியர்கள் நாடு திரும்பாவிடில்,அவர்களே சொந்த செலவில் அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்திய அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

https://m.ndtv.com/indians-abroad/return-by-september-25-or-make-own-arrangements-sushma-swaraj-to-indian-workers-in-saudi-1449158

வேலையிழந்துள்ள இந்தியர்களுக்கு உதவ சவூதி மன்னரே நேரடியாகத் தலையிட்டுள்ள நிலையில்,இவ்வாறு கெடுவிதிப்பது சரியாக படவில்லை. இந்தியர்களின் வெற்றிடத்தை நிரப்ப பிலிப்பைன், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள் போட்டியாக இருக்கும் நிலையில் இத்தகைய எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அறிவிப்புகள் இந்தியர்களின் வாய்ப்புகளைக் குறைக்கவே செய்யும்.

சமீபத்தில் பங்களாதேஷிலிருந்து வேலைக்கு வருவதற்கு இருந்த தடைகளை சவூதி அரசு நீக்கியுள்ளதால் அவசர குடுக்கைத்தனமாக செயல்படுவதால் நஷ்டம் நமக்கு மட்டுமே என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் சரி.

Close