உலகின் மிகப்பெரிய விமானம் விபத்துக்குள்ளானது! (படங்கள் இணைப்பு)

ஹைபிரிட் ஏர் வெகில்ஸ் (Hybrid Air Vehicles) என்ம் நிறுவனம் 35.6 மில்லியன் டாலர் செலவில் ஏர்லேண்டர்-10(Airlander ) எனற விமானத்தை உருவக்கியது. மொத்தம் நான்கு என்ஜின்கள் கொண்ட ஏர்லாண்டர் விமானம், 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 845 அடி உயரமும் கொண்டது.

விமானம், ஹெலிகொப்டர் மற்றும் விண்கலம் என மூன்றையும் கலந்து செய்த கலவையே இந்த விமானம். பெட்போர்டுசையரில் உள்ள கேர்டிங்டான் விமானத்தளத்திலிருந்து முதல் பயணத்தை தொடங்கியது.

உலகின் பெரிய விமானம் வானில் பறப்பதை காண, புகைப்படக்காரர்களும், மக்களும் விமான தளத்தில் குவிந்தனர். மேலும் கைதட்டி ஆரவாரம் செய்து முதல் பயணத்தை ஊக்குவித்தனர்.

இங்கிலாந்து நிறுவனம் மேற்கொண்ட பல சீரமைப்பிற்கு பின்னர், வெற்றிகரமாக வானில் பறந்த ஏர்லேண்டர் 10, தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்தது.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து பெட்போர்ட்ஷையர் கவுண்டி என்ற தளத்தில் இருந்து மீண்டும் இரண்டாவது சோதனை ஓட்டத்தின் வானில் உயரே புறப்பட வேண்டிய நிலையில், விமானத்தின் முன்பாகம் திடீரென தரையில் மோதி விழுந்து விபத்திற்குள்ளானது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.image image image image image image

Close